சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலையில் உள்ள பிரிஞ்சி கடைகளில் 20, 30, 40 என்ற வெவ்வேறு கட்டணங்களில் சைவ பிரியாணி எனப்படும் பிரிஞ்சி சாதம் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் இந்த 30 ரூபாய் பிரியாணி தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது இது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரி பார்ப்பகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இது முற்றிலும் பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வரும் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சி அல்ல பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு புதிய மட்டும் வெட்டி பரப்பி வருகின்றனர் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது