
நடிகர் ராஷ்மிகா மந்தனா திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவிற்கு இன்று 29 வது பிறந்த நாள்.
இதை கொண்டாட வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஷ்மிகாவின் சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.