பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறுவர்களுக்கு அளித்த பேட்டியில் தலைவர் பதவிக்கான போட்டியில் நாங்கள் இல்லை என கூறினார். தமிழக பாஜக நிலவரம் பற்றி சமீபத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்தோஷ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினால் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 11-ம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில் புதிய மாநில மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களிடம் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும்.

அதன் அடிப்படையில் 11-ஆம் தேதி அல்லது 12-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.