18 ஆவது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.  மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 203 ரன்கள் குவித்தது. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததால் லக்னோ அணி வெற்றியை கைப்பற்றியது.

இதில் மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  தன் மூலமாக ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற மாபெரும் சாதனை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். லக்னோ அணியின் பேட்ஸ்மென்கள் மிட்செல் மார்ஷ் 60 ரன்களும், மார்க்ரம் 53 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசிய ஹர்திக்  5 விக்கெட்களை கைப்பற்றினார். ஹர்திக்  அதிரடியாக விளையாடி மார்க்ரம் (53), பூரன் (12) ஆகியோரை அவுட்டாக்கினார்.