இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும் நிலையில் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதாவது ஒரு பெண் சாலையில் இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது இரு வாலிபர்கள் பைக்கில் செல்கிறார்கள். அந்தப் பெண் நடந்து செல்வதை பார்த்ததும் திடீரென பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர் தவறான நோக்கத்தோடு அந்த பெண்ணை நோக்கி ஓடி வருகிறார்.

 

ஆனால் அந்த பெண் சிறிதும் அச்சமின்றி அவரை எதிர்த்தார். அந்த பெண் அவரை அடிப்பதற்கு பின்னால் துரத்தி சென்ற நிலையில் அவர் பயந்து போய் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் பிரச்சனை என்று வரும்போது அந்தப் பெண் பயப்படாமல் துணிச்சலாக அவரை எதிர்த்தது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.