
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு கொடுத்ததால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
அ ந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது. இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வக்பு சொத்துக்களை பாதுகாக்கவும் உதவும். இனி வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை இஸ்லாம் மக்களை சென்றடையும். அதனை இடைத்தரகர்கள் கொள்ளையடிக்க முடியாது. மேலும் வக்பு சொத்துக்களை முறையாக பராமரித்து சட்டப்படி அதனை பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.