
அரசு மற்றும் தனியார் ஊழியர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கு ஏற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆனாலும் இந்த தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும்.
இந்நிலையில் அட்வான்ஸ் தொகையை முன்கூட்டியே எடுக்க உதவும் ஆட்டோ செட்டில்மென்ட் முறை அறிமுகப்படுத்தபட்டுள்ளது. தற்போது பி எஃப் பணத்தை திரும்ப பெறுவதற்கான இந்த ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பை ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அட்வான்ஸ் தொகைக்கான கோரிக்கைகள் இந்த ஆட்டோ செட்டில்மெண்ட் முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து வரும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் பிஎப் பணத்தை UPI மூலமாக எடுக்கும் நடைமுறைகள் அமலுக்கு வரும் என்றும் பிஎப் பணத்தை திரும்ப பெறுவதற்கான சரிபார்ப்பு முறைகளை 27 இலிருந்து 18 ஆக குறைத்துள்ளதாகவும் வெளியிட்டுள்ளார்.