
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் தனுஜா முக்னே என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய தோட்டத்தில் அடிபட்ட நிலையில் கடந்த ஒரு காகத்தை கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 15 நாட்களாக அந்த காகத்திற்கு அவர் சிகிச்சை வழங்கி வந்த நிலையில் பின்னர் அது நன்றாக குணமடைந்தது. அது நன்றாக குணமடைந்ததும் அம்மா அப்பா போன்ற வார்த்தைகளை மனித குரலில் பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த வீடியோவை தற்போது instagram பக்கத்தில் ஒருவர் வெளியிட அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக கிளிகள் தான் மனிதர்கள் போன்று பேசும் என்று கூறுவார்கள். ஆனால் ஒரு காக்கை மனிதர்கள் குரலில் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அடுத்ததாக இந்த காகம் JEE தேர்வுக்கு தயாராகி இருக்கலாம் என்று ஒருவர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார். மேலும் இன்னும் சிலர் அந்த காகத்தின் தனித்திறமையை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram