
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் பொழுது தோனி ஆட்டம் இழந்தார். அந்த நேரத்தில் ரியாக்சன் செய்த சென்னை அணியின் ரசிகை ஒருவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆகியுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியே போட்டியானது ஞாயிற்றுக்கிழமை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதனை அடுத்து 183 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். ருத்ராஜ் 63 ரன்களும், ஜடேஜா 32 ரன்களும் எடுத்தனர். 11 பந்துகளை சந்தித்த தோனி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியோடு 16 ரன்கள் எடுத்திருந்தபோது சந்திப் சர்மா வீசிய பந்தில் ஹெட் மேயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டத்தை இழந்தார்.
View this post on Instagram
இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தோனி ஆட்டம் இழந்தது குறித்து சென்னை அணியின் ரசிகை ஒருவர் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ரியாக்ஷன் செய்தார் .இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவர் யார்? என்று சென்னை அணியின் ரசிகர்கள் இணையத்தில் தேட தொடங்கினார்கள் .அவருடைய பெயர் ஆர்யா பிரியா புயான். தொடக்கத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் பத்தாயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பின்பற்றியிருந்தார்கள். ஆனால் தற்போது அவர்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளார்கள்.