
விருதுநகரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் போன்ற 7500 க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வில் பல அரிய தொல்பொருள்கள் கிடைத்த நிலையில், தற்போது தங்கத்தாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 6 மி.மீ சுற்றளவு, 22 மி.கி எடையும் கொண்டுள்ளது. இதுவரை இங்கு தங்கத்தினால் ஆன 7 தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.