மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுடைய திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் என்ற புதிய திட்டத்தை 2022 ஆம் வருடம் மார்ச் 1ஆம் தேதி முதல் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்பினை பெறுவதற்கு உலக தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .

அதாவது இந்த திட்டம் தொடங்கப்பட்டது மார்ச் 1ஆம் தேதியோடு மூன்று ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக நான் முதல்வர் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதற்கான உயர்தரத்திலான மையங்கள் நிறுவப்பட வாய்ப்புள்ளதாகவும் திட்ட செயலாக்கத்துறை அறிவித்திருக்கிறது.