அமெரிக்காவின் லாங் பீச் நகரில் நடத்தப்பட்டிருந்த ஒரு லோடு வாகனத்தை ஒருவர் திருடி சென்றார். சுமார் 100 மைல் வேகத்தில் அந்த நபர் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பார்த்ததும் வாகனத்தின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் நேரத்தை வீணடிக்காமல் மற்றொரு வாகனத்தில் திருடனை துரத்தி சென்றார் . சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசாரும் திருடனை பிடிக்க முயன்றனர்.

ஆனால் திருடன் அதி வேகமாக வாகனத்தை இயக்கி சென்று சுமார் 13 வாகனங்கள் மீது மோதினார். ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் செரின் வில்லியம் பெயிண்ட் கடையின் படிக்கட்டின் மீது மோதி நின்றது. உடனே போலீசார் திருடனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த லோடு வாகனத்தில் உரிமையாளர் “எனது வாகனம் நொறுங்கியது மனதை பாதித்தது” என வருத்தமுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.