தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,  நமது தோழர்கள் அர்ஜுன் ,நிர்மல் குமார் ரமேஷ், இவங்கள அடி அடின்னு அடிக்கிறாங்க. நாமளும் அதே மாதிரி அடிக்கணும்னு மனசுக்குள்ள ஒரு யோசனை தான் இருக்கு.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே… பெயரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே… செயலையும் ஆட்சிலையும் அதை காட்டணும் அவர்களே… ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி அப்படின்னு அறைகூவல் விட்டு இங்க நீங்க பண்ற ஆட்சி மட்டும் என்ன? அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தான் என விமர்சித்துள்ளார்.  விஜயின் பேச்சை கேட்டு தொண்டர்கள் ஆர்பரித்தனர்.