
பெங்களூருவில் மாற்றியமைக்கப்பட்ட லாரி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த லாரியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பது போல் காணப்படுகின்ற வீடியோ, “பெங்களூருவில் என் கனவு வேலை” எனும் உரையுடன் இணையத்தில் பரவி வருகிறது. இந்த லாரி, ஒரு சிறிய அறை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் படுக்கை, ஏர் கண்டிஷனர், டிவி போன்ற வசதிகள் அனைத்தும் உள்ளன. “படுக்கும் தருணமே சிறந்த தூக்கம் இங்கிருந்து துவங்குகிறது” எனும் வாசகத்துடன், இந்த விளம்பர வாகனம் cloud hybrid மேட்ரஸ் தயாரிப்பை பிரச்சாரம் செய்கிறது.
View this post on Instagram
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் “Bangalore Diaries” என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டு, இப்போது 40 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் இதை தங்கள் கனவு வேலை எனக் கூறி கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் “ஃப்ரீயாவே இன்டர்ன்ஷிப் செய்யத் தயார், சார்!” எனக் கமெண்ட் செய்திருந்தால், மற்றொருவர் “3 இடியட்ஸ்” திரைப்பட வசனத்தை பதிவிட்டு “பணம் குறைவாகக் கிடைக்கலாம், ஆனா சந்தோஷமா இருப்பேன்” எனப் பகிர்ந்துள்ளார். இந்த விளம்பர யுக்தி, தயாரிப்பின் பயனையும் நேரடியாக காட்டும் புதுமையான முயற்சியாக பலரால் பாராட்டப்பட்டுள்ளது.