
ஐபிஎல்லில் கடந்த சீசனிலிருந்து பிட்சுகள் தொடர்ந்து பேட்டர்களுக்கு சாதமாக மாற்றப்பட்டது. சன்ரைசர் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்து அசத்தியது. மேலும் நான்கு முறை 250க்கு மேற்பட்ட ஸ்கோர் அடித்தார்கள். இதனால் 18 வது சீசனில் ஹைதராபாத் அணி 300+ மேற்பட்ட ஸ்கொர்களை அடிக்கும் என்று பலரும் கணித்து வருகிறார்கள். அந்தவகையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயன் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி எப்போது 300க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதாவது பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர், சரியாக ஏப்ரல் 17ஆம் தேதி அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 300 ரன்களை அடிக்கும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் டேல் ஸ்டெயன் இப்படி ஒரு கருத்தை கூறியதால் எக்ஸ் தளத்தில் அவரிடம் கேள்வி கேட்ட மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ஒருவர், ஒருவேளை அன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கினால் என்ன நடக்கும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்டெயின் நல்ல கேள்வி என்று பதிவிட்டு உள்ளார்.