
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் நடந்த கொடூரமான கொலை வழக்கை தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், முன்னாள் மெர்சன்ட் நேவி அதிகாரியான சௌரப் ராஜ்புத், தனது மகள் மற்றும் நண்பருடன் துணி கடையில் இருக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 41 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், சௌரப் தனது மகளின் கையை பிடித்துக்கொண்டு கடையில் நுழைவதும், மொபைலில் பேசிக்கொண்டு இருப்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ, அவர் கொலை செய்யப்பட்டதற்கு சில மணி நேரங்களுக்கு முன் எடுத்ததென கூறப்படுகிறது.
📹 मेरठ – सौरभ हत्याकांड ब्रेकिंग 📹
बेटी के साथ सौरभ का आखिरी वीडियो आया सामने
बेटी पीहू के जन्मदिन पर दिलाई थी नई ड्रेस। कपड़ों की दुकान पर फोन पर बात करता दिखा सौरभ। बर्थडे पार्टी में सौरभ और मुस्कान ने जमकर किया था डांस। सौरभ हत्याकांड में लगातार नए वीडियो आ रहे सामने।
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) March 24, 2025
“>
இதற்கு முன்பாக, மற்றொரு சிசிடிவி வீடியோவில், சௌரப் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு 11:50 மணிக்கு பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் சௌரப் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சௌரப்பை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவளது காதலன் சாஹில் ஷுக்லா சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தததோடு அவரது உடலை 15 துண்டாக வெட்டி, சிமெண்ட் நிரப்பிய ட்ரம்மில் வைத்து பூசி விட்டனர்.
सौरभ की जिंदगी का आखिरी वीडियो! #मेरठ के इंदिरानगर इलाके का यह वीडियो है जिसमें अपने घर वाली गली में घुसते हुए सौरभ दिखाई दे रहा है। सौरभ बाइक पर सीट के पीछे बैठा है जो उसके दोस्त पंकज की है। पंकज बाइक को ड्राइव कर रहा है
इसके 2 घंटे बाद सौरभ को उसकी पत्नी मुस्कान और… pic.twitter.com/Iz8JCADatX
— Narendra Pratap (@hindipatrakar) March 23, 2025
“>
இதேபோன்று, முஸ்கானின் காதலன் சாஹில், ஒரு பப்பில் மயக்க நிலையில் ஆடிக் கொண்டிருந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வழக்கை மேலும் விசாரிக்க உதவியாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சௌரப்பின் கொலை விவகாரம் முஸ்கானின் தாயாரின் புகாரின் அடிப்படையில் வெளிவந்தது. அவர், தனது மகள் சுயமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசாரிடம் தகவல் வழங்கினார். மேலும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.