மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு மனைவி தன் கணவனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கணவன் தன் மனைவியிடம் அடிக்காதே அடிக்காதே என்று கூறி கெஞ்சுகிறார். ஆனால் அந்தப் பெண் தன் கணவரை உட்கார வைத்து அவருடைய கழுத்தை நெரிக்கிறார். அதோடு  அவரை கண்மூடித்தனமாக அவர் அடித்து தாக்குகிறார்.

இந்த சம்பவம் நடந்தபோது அவருடைய கணவரின் தாயும்அருகே இருந்த நிலையில் பக்கத்தில் வராதீர்கள் என்று அவரையும் அந்த பெண் எச்சரிக்கிறார். அவரின் கணவர் இதை செல்போனில் வீடியோ பதிவு செய்கிறார். இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண் அவரை கண்மூடித்தனமாக அடித்து தாக்குகிறார். மேலும் அந்தப் பெண் தற்போது தன் கணவனை இப்படி கொடூரமாக அடித்து தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண்ணின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.