மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செய்லபடுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை. இதுஒருபுரம் இருக்க மறுபுறம் பணி நீக்கம்  என்ற பெயரில் பலருக்கு இருக்கும் வேலையும் பறிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அப்படியானவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் விதமாக மத்திய அரசு உதவி தொகை வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அதாவது அடல் பீமித் விய்க்தி யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை இழந்த தகுதியுள்ள காப்பீட்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் பெற்ற வருவாயில் 20 முதல் 25 சதவீதத்தில் 100 நாட்களுக்குள் வழங்கி வருகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்வதற்கு https://www.esic.gov.in/abvky என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.