
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவர்தான் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இவர் இயக்கத்தில் வாழை படம் வெளியானது. இவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.
அதுமட்டுமின்றி வசூலிலும் பட்டையை கிளப்பியது. தற்போது நடிகர் துருவ் விக்ரம் கதாநாயக நாயகனாக நடிக்கும் பைசன் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர், “மாமன்னன் படப்பிடிப்பு நடந்த சேலத்தில் படம் எடுத்தால் ஓடாது என்கிறார்கள் என்று தான் உதயநிதியிடம் அப்போது கூறினேன். ஆனால் அவர் தயக்கம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கதை சொல்லும் விதத்தில் ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்பதால் நான் செய்த செயல் இன்று தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களுக்கும் பெரிய சிக்கல்களாக மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்.