உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மெர்சன்ட் நேவி அதிகாரியான சௌரப் ராஜ்புத்தை, அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி, காதலன் சாஹில் ஷுக்லா உடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு முன்பே, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது, அதில் முஸ்கான், தனது கணவரும், அவர்களது மகளும் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடுவது காணப்படுகிறது. இந்த வீடியோ, முஸ்கான் தன் கணவருடன் நல்ல உறவிலேயே இருந்தார் என்ற தோற்றத்தை அளித்தாலும், கொலையை திட்டமிட்டே செய்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சௌரப் கடந்த மார்ச் 4-ஆம் தேதி காணாமல் போன நிலையில், அதே நாளில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு பிறகு, முஸ்கான் மற்றும் சாஹில், சௌரப்பின் உடலை 15 =துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து, மேலே சிமெண்ட் போட்டு பூசி மறைத்துள்ளனர். இந்த கொடூர குற்றத்திற்குப் பிறகு, இருவரும் ஒரு ஹில் ஸ்டேஷனுக்குச்விடுமுறை சென்றனர். இதைத்தொடர்ந்து முஸ்கான் சிம்லாவுக்கு சென்ற நிலையில்  தனது தாயிடம் கணவனை கொலை செய்தது பற்றி  ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுடைய வீட்டிற்கு சென்று, சிமெண்ட் டிரம்முக்குள் இருந்த போது சௌரப்பின் உடல் பாகங்களை மீட்டனர். கோபம் கொண்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் முஸ்கான் மற்றும் சாஹிலை தாக்கியதுடன், இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கொலைக்கு பிறகு சௌரப் செல்போனை பயன்படுத்திய முஸ்கான் தன் கணவர் மெசேஜ் செய்வது போல் அவருடைய உறவினர்களுக்கு மெசேஜ் செய்துள்ளார். ஆனால் பலமுறை உறவினர்கள் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகப்பட்ட சகோதரி புகார் கொடுத்தார். இவர்களின் ஆறு வயது மகள் தான் தன்னுடைய தந்தை டிரம்முக்குள் இருப்பதாக போலீசாருக்கு காட்டி கொடுத்தார். மேலும் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் சௌரப் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் முஸ்கானுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.