
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில், ஒரு 14 வயது சிறுமியை கடத்திச் சென்று 4 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணில் குமார், ஜிதேந்திரா ஆகிய இருவரும் சிறுமியை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவர்களின் நண்பர்களான அனித், ஹர்ஷவர்தன் மற்றும் மற்றொரு சிறுவனை அழைத்துவந்த நிலையில் அவர்களும் சிறுமியை தொடர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். 4 நாட்கள் சிறுமியை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த பிறகு, மச்சாவரம் சாலையில் சிறுமியை விட்டு பாலியல் குற்றவாளிகள் தப்பி சென்றனர்.
சாலையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோ டிரைவர் கண்டுபிடித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மிகுந்த மனச்சோர்வுடன், பேச முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்ததால், அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, போலீசார் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளான 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.