திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நாறும்பூநாதன் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று நாறும்பூநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்றவர்.

இவரது கனவில் உதிர்ந்த பூ உள்ளிட்ட சிறுகதைகள், திருநெல்வேலி, நீர்-நிலம்-மனிதர்கள், வேணுமன மனிதர்கள் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானது. எழுதுவது மட்டுமில்லாமல் சமூக களப்பணிகளும் முன்னணியில் இருப்பவர் நாறும்பூநாதன். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.