
சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு எட்டாவது மெயின் ரோடு பகுதியில் இருக்கும் வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த டேவிட்ராஜ்(45) என்பவர் பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. அவர் ஐ.டி ஊழியர்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் ராஜ் பிரபல பாலியல் புரோக்கராக இருந்தவர். அதன் பிறகு போலீசாரின் நடவடிக்கையால் டேவிட் ராஜ் தொழிலை கைவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் தற்போது மீண்டும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் டேவிட்ராஜை கைது செய்தனர். பின்னர் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.