அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், “சாத்தானின் சீடர்” விமானத்தில் இருக்கிறார் என்று கூறி, மற்றொரு பயணியையும், விமான ஊழியரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா மாநிலம் சவான்னா நகரிலிருந்து மையாமி நோக்கிச் சென்ற விமானத்தில் மார்ச் 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. 31 வயதான டெலேஞ்ச் ஆகஸ்டின் என்ற பயணி, விமானம் புறப்பட்ட சில நொடிகளில், ஆகஸ்டின் திடீரென கூச்சலிட்டு, ஒழுங்கற்ற நடத்தை காட்டியதாக குற்றவியல் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இருவர் அவரை சமாதானப்படுத்த முயன்றபோது, அவர் திடீரென ஒருவரை மார்பில் உதைத்து, அவர் அருகிலிருந்த இருக்கைக்கு தள்ளப்பட்டார். இது மற்ற பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பை விமானி கேபினிலிருந்து கேட்டவுடன், விமானத்தை திருப்பிச் சென்று மீண்டும் சவான்னாவில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு ஆகஸ்டின் மேலும் கோபமடைந்து, தன் முன் இருந்த பயணியையும் அவருடைய இருக்கையையும் தாக்கி சேதப்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும், ஆகஸ்டின் தனது இருக்கையிலிருந்து எழுந்து, முன்னால் சென்று விமான ஊழியரொருவரை பலமுறை குத்தியுள்ளார். இதையடுத்து, மூன்று பயணிகள் தலையிட்டு அவரையும், அவருடன் பயணித்த சகோதரியையும் நிலைதளத்தில் கட்டுப்படுத்தினர். விமான நிலைய காவல்துறையினர் உடனடியாக விமானத்துக்குள் நுழைந்து, அவரை கைதுசெய்தனர். அதன்பிறகு, அவர் ரோஸரி மணிகளை விழுங்கியதன் காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், ஆகஸ்டின் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காகவே இந்த செயல்களைச் செய்ததாக அவரது சகோதரி மெட்ஜினா ஆகஸ்டின் கூறியுள்ளார். தாங்கள் ஹைத்திக்கு சென்று ஆன்மீக தாக்குதல்களிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்ததாகவும், அந்த விமானத்தில் அதிகமான “இருள்” இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆகஸ்டின் மீதான விசாரணையில், அவர் மருத்துவத்திற்கோ, மனநல பிரச்சனைகளுக்கோ ஆளாகவில்லை என்பதும், அவர் தன்னை மற்றும் சகோதரியைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலையில், ஆகஸ்டின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, அவர் சதாம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.