தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிஸ்தா ரெட்டி பேட்டை பகுதியில் ஒரு பெண்கள் விடுதி உள்ளது. இங்குள்ள பெண்கள் செல்போன் சார்ஜர்களுக்குள் இருந்து ஒரு ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக விடுதியில் உள்ள பெண்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த விடுதியின் வார்டன் தான் பெண்களின் செல்போன் சார்ஜருக்குள் ஸ்பை கேமராக்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த விடுதி வார்டன் மகேஸ்வரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த கேமராவை போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில் அதன் தரவுகளின் அடிப்படையில் அதற்கு அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.