ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்த போராட்டத்தில் இறுதி கட்டத்தில் கே.எல் ராகுல் 34 ரன்கள் எடுத்து 103.03ஸ்டிரைக் ரேட்டுடன் அணி வெற்றி பெற உதவினார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ராகுல், “அடுத்த அணிக்காக விளையாட இரண்டு பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். ஆனால் நான் பதற்றத்தில் தான் இருந்தேன். இது போன்ற சூழ்நிலைகளில் உங்களை நீங்களே எப்படி அமைதிப்படுத்திக்கொண்டு உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவையாக இருந்தது. உண்மையான திறமையோடு நாங்கள் அனைவரும் எங்களுடைய கிரிக்கெட்டை விளையாடிய விதம் வார்த்தைகளால் கூறிவிட முடியாது.

நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. பேட்டிங் செய்யும்போது நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிசிசிஐ எங்களை வளர்த்தெடுத்த விதம் மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் என நெருக்கடியை எதிர்கொள்ளவும் மற்றும் இதுபோன்ற சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் எங்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து இருந்தது” என்று கூறியுள்ளார்.