மைனாக்கள் பொதுவாக கிழக்கு ஆசியாவில் மட்டுமே வாழக்கூடிய பறவை இனமாகும். இவை  கூட்டமாக வாழக்கூடியவை ஆகும். இந்தப் பறவைகள் ஒவ்வொரு காலநிலைகளிலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும். இந்த நிலையில் இவை தற்போது அதிக அளவில் கத்தாருக்கு குடி பெயர்ந்து வருகின்றன. இதனால் கத்தாரில் சுற்றுச்சூழல் சமநிலை இன்மை ஏற்படுவதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கத்தாரின் பசுமை சூழலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பயிர்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கத்தார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம் இவற்றின் வளர்ச்சியை  தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் படி கடந்த 3 மாதங்களில் மட்டும் 9,934 மைனா பறவைகள் பிடிபட்டுள்ளன.

இதற்காக கத்தார் அமைச்சகம் சிறப்பு கூண்டுகள் தயாரித்து சிறை பிடித்துள்ளனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும் மொத்தம் இதுவரை 28000 மைனா பறவைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்த வகை பறவைகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. இருப்பினும், அதிக ஆக்கிரமிப்பு தன்மையுடன் அதிக அளவில் பெருகி வருவதால் கத்தாரில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் கத்தாரின் முக்கியமான இடங்களில் மைனா பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.