
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் ஆணித்தனமாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்ட பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, அரசியல் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக எளிதில் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் மும்மொழி கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறு சிறுமைப்புக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. எனவே மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக அரசு அவர்களது ஏஜெண்டுகளான அமலாக்க துறையை வைத்து சோதனை நடத்துகின்றனர். இது திசை திருப்புவதற்கான வழியாகத்தான் பார்க்கிறோம். இது போன்ற பல சோதனைகளை நாங்கள் பார்த்துவிட்டோம். சோதனை முடிந்த பிறகு உண்மை தெரியவரும் என கூறியுள்ளார்.