மத்திய,  மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுடைய திறன் மற்றும் நிதி நிலைத் தன்மையை மேம்படுத்துவதற்கு புதிய புதிய விவசாய தொழில்நுட்பங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தலைக்கூளம் என்ற புதிய தொழில்நுட்ப திட்டத்தை கடைபிடிக்கும் விவசாயிகளுக்கு பீகார் அரசு மானியம்  வழங்குகிறது. தலைக்கூளம் என்பது மண்ணை ஒரு பாதுகாப்புடன் மூடும் ஒரு முறை. இது மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மாநில அரசின் வேளாண் துறையின் தோட்டக்கலை துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மாநிலம் முழுவதுமாக தலைக்கூளம் பயிரிடுவதை  ஊக்குவிப்பதற்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டமானது அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இது தாவரங்களின் ஆரோக்கியமான வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. களை வளர்ச்சியை அடக்குகிறது. மண் சுருக்கத்தை தடுக்கிறது. சிறந்த நீர் பயன்பாட்டை உறுதி செய்கிறது. இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.