பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் டிராகன். இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஓ மை கடவுளே படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனோடு இணைந்து அனுபாமா பரமேஸ்வரன,  கயாடு லோகர், மிஷ்கின்,  உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் வணிக ரீதியாக 100 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் அஸ்வத்தை நடிகர் ரஜினிகாந்த் அவருடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் படம் 100 கோடி கிளப்பில் இணைத்துள்ளதை படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.