ஈரோட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அழைப்பு தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.