ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசின் நிதியுதவிகளை பெறுவதற்கு அரசு வழங்கும் ஒரு அட்டை.  ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கிறது. இதன் மூலமாக நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை செய்யாதவர்களுடைய ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்காது.

இருப்பினும் இதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதுவரை ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரேஷன் கார்டு ஆதார் கார்டு கேஒய்சி சரிபார்ப்பை  செய்துவிட வேண்டும். இதற்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளிலேயே செய்யலாம். வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை. தெரியாதவர்கள் பக்கத்தில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்றால் வேலையை முடிக்கலாம். மத்திய அரசின் இந்த முக்கிய அறிவிப்பை மக்கள் புறக்கணிக்காமல் இதுவரை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.