
கேரள மாநிலம் கோட்டயத்தில் மாடல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவனின் காது கிழிந்து ரத்தம் வந்தது. அந்த மாணவனுக்கு காது துண்டான நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது மாணவனுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது மாணவன் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தை பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் மறைக்கும் முயன்றதால் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக பெற்றோர் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் சைல்ட் லைன் அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.