
உலகின் மிக வயதான கிரிக்கெட்டர் என அழைக்கப்பட்டவர் ரோன் டிராபர். தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரான ரோன் ட்ராஃபர் தனது 98 வயதில் காலமானார். தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரோம் டிராபர் கடந்த 1950-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட்களில் விளையாடினார்.
அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதில் தொடர்ந்து இரண்டு சதம் விளாசிய முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோன் டிராபரின் சராசரி ரன் குவிப்பு 41.64 சதவீதம் ஆகும்.