உத்திரபிரதேச மாநிலம் புல்வாரியா கிராமத்தில் ரத்தன் லால்- சீதாதேவி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த நிலையில் காட்டை விட்டு வெளியே வந்த புலி புல்வாரியா கிராமத்திற்குள் நுழைந்தது. இதனையடுத்து தூங்கிக் கொண்டிருந்த சீதா தேவியை புலி தாக்கியது. சீதாதேவியின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த ரத்தன் லால் புலியிடமிருந்து தனது மனைவியை காப்பாற்றியுள்ளார்.

மனைவியை காப்பாற்றுவதற்காக ரத்தன் புலியை அடித்து கொலை செய்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சீதா தேவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.