
UPI இருந்தால் பணம் அல்லது ATM கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஸ்மார்ட் போன்கள் மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதனால் பொதுமக்கள் பலரும் வியாபார ரீதியாகவும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறிய கடை முதல் பெரிய மால்கள் வரை எங்கு சென்றாலும் UPI பேமெண்ட் மூலம் பண பரிவர்த்தனையை உடனடியாக செய்து கொள்ள முடியும். இந்த நிலையில் UPI வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் சில சேவைகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை கட்டணம் 0.5% முதல் 1% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கிரெடிட் கார்டுகள் மூலம் UPI தளங்களை பயன்படுத்தி செலுத்தப்படும் கட்டணங்களுக்கு சேவை கட்டணங்கள் விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட UPI ஐடிகளை பயன்படுத்தும் போது சேவை கட்டணத்தை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.