
நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் உள்ளது. இங்குள்ள சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் குசோபோகி என்ற இடத்திற்கு அருகே சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல பேருந்து முயற்சித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென அருகே வந்த ஒரு டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து மற்றும் லாரி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் பேருந்தில் இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.