திமுக ஐடி விங் கெட் அவுட் மோடி என்று பதிவிட்டதற்கு அண்ணாமலை கடுமையான எதிர்வினை ஆற்றினார். அவர் நேற்று கூறும் போது இன்று காலை 6 மணி வரை அவர்களுக்கு டைம் என்றும் நானே என்னுடைய எக்ஸ் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிடுவேன் என்று கூறியிருந்தார். மக்கள் கெட் அவுட் மோடி மற்றும் கெட் அவுட் ஸ்டாலின் இரண்டில் யாருக்கு அதிக ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்று அவர் பதிவிட்டுள்ளார். அதோடு குடும்ப ஆதிக்கம், ஊழல் மற்றும் போதை பொருட்களின் புகலிடமாக விளங்கும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் மக்கள் ஸ்டாலினை தூக்கி வீசுவார்கள் என்றும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

நேற்று அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசிய நிலையில் அது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன் முடிந்தால் திமுகவினரின் மொத்த படையையும் இறக்குங்கள் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார். மேலும் பதிலுக்கு உதயநிதி ஸ்டாலினும் தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது கெட் அவுட் மோடி மற்றும் கெட் அவுட் ஸ்டாலின் என்று திமுக மற்றும் பாஜக எக்ஸ் தளத்தில் மோதிக் கொள்வது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.