
எஸ்பிஐ வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் வருங்கால வைப்பு நிதி திட்டம். நீண்ட காலத்திற்கும் முதலீடு செய்து பாதுகாப்பான வருமானம் ஈட்டுவதற்கு இது ஒரு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் வருடத்திற்கு 7.1% வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் காலம் 15 வருடங்கள். அடுத்து ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கபடலாம் இந்த திட்டத்தில் சேர நினைப்பவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். யாருக்காக இருந்தாலும் தங்களுடைய பெயரில் இந்த கணக்கை தொடங்கலாம்.
பிரிக்கப்படாத குடும்பத்திற்கு இந்த கணக்கு திறக்க அனுமதி கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இந்த கணக்கை தொடங்க முடியாது. பெற்றோர் தங்கள் மைனர் குழந்தைகளின் சார்பாக கணக்குகளை திறக்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மைனர் கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த திட்டத்தில் கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு தேவையான ஆவணங்கள் என்னவென்றால், பிபிஎஃப் கணக்கு திறப்பு படிவம்-1, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றின் நகல்கள்.
பாஸ்போர்ட், மின் கட்டணம் போன்ற முகவரி சான்று நகல்கள் தேவை. இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் டெபாசிட் செய்தால் ஒரு வருடத்தில் 6000 ரூபாய் சேரும். 15 வருடங்களில் மொத்தம் 90 ஆயிரம் சேர்ப்பீர்கள். 7.1% வட்டி வீதத்தில் 15 வருடத்திற்கு பிறகு தோராயமாக ஒரு லட்சத்து 62 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கிடைக்கும். விரும்பினால் திட்டத்தை மேலும் நீட்டித்து கொள்ளலாம்.