சென்னை மாவட்டத்தில் தினமும் 3200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் சுமார் 1,500 மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகிறது. சமீப காலமாக சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த தமிழ்நாடு அரசு  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சிவப்பு நிறத்தில் 174 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகளை விடியல் பயணத்திட்ட பேருந்துகளாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். வருவாய் குறைவாக இருக்கும் பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விடியல் பயண திட்ட பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை சராசரியாக 63 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.