இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. புதுவிதமாக மோசடிகளை அரங்கேற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் அரஸ்ட், பகுதி நேர வேலை, வாட்ஸ் அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறித்தல், செல்போனுக்கு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்வதன் மூலம் வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு பணத்தை அபேஸ் செய்தல் என பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கிறார்கள்.

இது போன்ற மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். அதன்பிறகு வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று ஏமாற்றுகிறார்கள். இந்த நிலையில் தற்போது செல்போனுக்கு ஒரு புதுவிதமான மெசேஜ் அனுப்பி ஏமாற்றுகிறார்கள். அதாவது உங்களுக்கு ஒரு டெலிவரி ஆர்டர் வந்துள்ளது எனவும் 12 மணி நேரத்திற்குள் உங்களுடைய லொகேஷனை நீங்கள் அனுப்பாவிட்டால் உங்கள் டெலிவரியை நாங்கள் திரும்ப எடுத்துக் கொள்வோம் என்று மெசேஜ் அனுப்புகிறார்கள்.

அதனுடன் அவர்கள் ஒரு லிங்கையும் அனுப்புகிறார்கள். ஒருவேளை இதனை உண்மை என நம்பி அந்த லிங்கை கிளிக் செய்து லொகேஷனை ஷேர் செய்தால் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் ஏமாற்றி விடுவார்கள். எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் மக்கள் உஷாராக இருப்பதோடு உடனடியாக அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று கவர்ச்சிகரமாக மெசேஜ் அனுப்பி பொதுமக்களை ஏமாற்றுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டதால் இது போன்று மோசடி மெசேஜ் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்