
தென் அமெரிக்கா நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு ஒன்று மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதிலும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் மனிதர்களாலும் பல உயிரினங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றது. இப்படியான சூழலில் உலகில் பெரும்பாலான விலங்குகள் அழியும் தருவாயில் தான் இருக்கின்றன. இந்த நிலையில் நூறு ஆண்டுகளில் மொத்தமாக அழிந்து விட்டதாக கருதப்பட்ட விலங்கான டாபிர் இனம் ஒன்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1914 ஆம் ஆண்டில் இதை கேமராவில் பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த பகுதியில் இந்த விலங்கு தென்படவில்லை. பல வருடங்களாக விலங்கு ஆர்வலர்களும் இந்த விலங்கை தேடி உள்ள நிலையில் தென்படாத காரணத்தால் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த விலங்கு பிரேசிலில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் காணப்பட்டுள்ளது. ஒரு தாய் டாபிர் இரண்டு குட்டிகளுடன் செல்லும் காட்சியை சிலர் வித்தியாசமான உயிரினமாக தெரிந்ததால் படம் எடுத்துள்ளனர். இதன் மூலமாக அந்த விலங்கு இனம் இன்னும் அழியவில்லை என்பது தெரியவந்துள்ளது.