தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகிபாபு. இவர் பிரபல காமெடியனாக மட்டுமல்லாமல் சிறந்த கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பொம்மை நாயகி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகிபாபு.

இந்த நிலையில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகி பாபு சென்றபோது அவர் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது கார் ஏறி விபத்துக்குள்ளாகியது என்றும், அவர் நல் வாய்ப்பாக உயிர் தப்பினார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து வேறொரு காரில் யோகி பாபு பெங்களூருக்கு புறப்பட்டார் என்று செய்தி வெளியான நிலையில் யோகிபாபு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “விபத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் கார் தான் சிக்கியது. விபத்தில் என்னுடைய கார் சிக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.