
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மக்களுக்காக தான் நான் களத்திற்கு வந்துள்ளேன். நான்தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. எனக்கு யாரிடம் இருந்தும் பாதுகாப்பு தேவையில்லை. காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் சைரன் வைத்த வாகனம் எனக்கு வேண்டாம் என்று கூறினார். தனக்காக வந்த வாகனத்தை திருப்பி அனுப்பி விட்டார். மக்கள் அரசியலில் பாதுகாப்பு என்பது தேவையில்லை. ஆனால் தம்பி விஜயை போல புகழ்பெற்ற நடிகருக்கு அது சிரமம் தான். என்னைப்போல அவரால் நின்று பேச முடியாது.
அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கியுள்ளதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கோவை குண்டுவெடிப்பை பற்றி பேசுபவர்கள் குஜராத்தை பற்றியும் பேச வேண்டும். ராஜீவ் காந்தி அனுப்பிய படை ஏற்படுத்திய பேரழிவையும் பேச வேண்டும். இஸ்லாமியர் யாரும் எனக்கு ஓட்டு போட்டதில்லை. எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் மக்களுக்காக இருப்பவன் தான் நான். மக்களுக்காக நீ காசு கொடுக்கின்றாய். இங்கு எல்லோரும் காசு கொடுத்து ஓட்டை வாங்கி கொள்கிறார்கள். இது பற்றி ஏதாவது பேசினால் கைக்கூலி, கால் கூலி, ஓட்டு பிச்சை என்று சொல்கிறார்கள். நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம் என்றல் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்களே வீட்டில் வந்து கொடுக்கிறார்களா? இதெல்லாம் அநாகரிகமானது என்று அண்ணாமலைக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.