முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இன்று  பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நியூஸிலாந்து இரண்டு வெற்றிகளோடு முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் வென்றதன் மூலமாக பாகிஸ்தானும் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஒரு வெற்றி கூட பெறாத தென்னாபிரிக்கா தொடரிலிருந்து வெளியேறியது.

புதன்கிழமை ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் தென்னாபிரிக்க 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் 49 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழந்து 355 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அதிகபட்ச வெற்றிகரமான சேசிங்கை பதிவு செய்து சாதனை படைத்தது.

இதற்கு முன்பு அந்த அணி 2022 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 349 ரன்களை வெற்றிகரமாக செய்ததே அதிகபட்சமாக இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக பாகிஸ்தானில் இன்று நடைபெறும் தொடரில் வெற்றி பெறப்போவது யார்? என்று ரசிகர்களுடைய பலத்தை எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.