
மராத்தியத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் தொடர்ந்து 30 சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அதன் பின் தென்னிந்தியா பக்கம் வந்த இவர் சீதா ராமம் என்ற படத்தின் மூலம் முன்னணி நாயகியாக விளங்கினார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, நான் நிறைய ஹிட் படங்களை ஒரு சில காரணத்திற்காக மிஸ் செய்துவிட்டேன். நான் சினிமா என்று முடிவு செய்த உடனே எனது பெற்றோர்கள் முத்தம், ஆபாசம் போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது என்று ஆரம்பத்திலேயே கண்டிஷன் போட்டார்கள். அதனாலேயே நிறைய பட வாய்ப்புகளை நான் இழந்தேன். ஒரு கட்டத்தில் நாயகி ஆகும் கனவு இதனால் நிறைவேறாமல் போகுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களிடம் பேசி புரிய வைத்தேன் என்று கூறியுள்ளார்.