
தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என்று அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் “அலைபாயுதே” என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மின்னலே, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இதனையடுத்து இறுதிச்சுற்று படத்தின் மூலம் மீண்டும் இவரது திரைப்பயணம் சூடு பிடித்துள்ளது என்றே கூறலாம். நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இயக்குனராகவும் சாதித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் துபாயில் புதிய வீடு வாங்கி இருக்கும் மாதவன் தற்போது புதிய பைக் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதாவது பிரிஸ்டன் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனையை தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவில் முதல் நபராக நடிகர் மாதவன் அந்த பைக்கை வாங்கி உள்ளார். இந்த பைக்கின் விலையானது சுமார் 7,84,000 ரூபாய் என்று கூறப்படுகிறது.