உண்மையை சொன்னால் கட்சியை விட்டு நீக்குவீர்களா என்று அதிமுக நிர்வாகியாக இருந்த உதயகுமார் கொந்தளித்துள்ளார்

மதுரை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார் 15வது கிழக்கு வட்ட கழக செயலாளர் உதயகுமார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த ஆறாம் தேதி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கட்சியை விட்டு நீக்கியது அதிமுக தலைமை. இதனால் மதுரை மாநகர அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்னவென்று சொன்னால் உறுப்பினர் சேர்க்கை குளறுபடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது தான். ஒரு கோடி உறுப்பினர்களை மூன்று கோடிகளாக உறுப்பினர்களாக ஆக்கி காட்ட வேண்டும் என்று அதிமுக தலைமையிலிருந்து உத்தரவு வந்துள்ளது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைத்து நிர்வாகிகளும் வாக்காளர் லிஸ்ட்டை வைத்து போலியாக உறுப்பினர் அட்டை தயாரித்து தலைமையை ஏமாற்றி உள்ளார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத உண்மையான ரத்தத்தின் ரத்தமான உதயகுமார் செல்லூர் ராஜிடம் முறையிட்டு உள்ளார். இதனை அடுத்து திடீர் என்று உதயகுமார் இதுகுறித்து பத்திரிக்கைக்கு தெரிவித்தார். இதனால் உதயகுமாரை செல்லூர் ராஜுவே கட்சியை விட்டு நீக்க சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உண்மையை சொன்னால் கட்சியை விட்டு நீக்குவீர்களா என்று அதிமுக நிர்வாகியாக இருந்த உதயகுமார் கொந்தளித்துள்ளார்.