திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவக்கரையில் ரூத்வேந்திரன் (26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூத்வேந்திரன் 20 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்த நிலையில் உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என ரூத்வேந்திரன் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

.அதனை நம்பி கடந்த 7-ஆம் தேதி இளம் பெண் அவரை பார்க்க சென்றார். அப்போது தனியாக பேசலாம் என கூறி சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று தனது நண்பரான தனுஷ் என்பவருடன் இணைந்து ரூத்வேந்திரன் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரூத்வேந்திரன், தனுஷ் ஆகி இருவரையும் கைது செய்தனர்.