மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரோட்டனுக்கு ஒரு விமானம் கிளம்பியது.இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென ஒரு பயணி எழுந்து நின்று துப்பாக்கியை வைத்து அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். அவர் பயணிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டிய நிலையில் விமான பணிப்பெண்கள் துணிச்சலாக செயல்பட்டு அவரை பிடித்தனர்.

உடனடியாக விமானி மீண்டும் அதே விமான நிலையத்திற்கு சென்று விமானத்தை தரையிறக்கினார். அந்த விமானம் தரையிறங்கியவுடன் அந்த நபரை கைது செய்தனர். விமானத்தில் பயணி செல்லும் முன்பு பலகட்ட சோதனைகள் நடைபெறும். அந்த சோதனைகளை மீறி ஒருவர் துப்பாக்கியை கொண்டு சென்றது பாதுகாப்பு அம்சங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.